சேலம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு விழா இந்த வருடம் நடத்தப்படுவது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ரோகினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சேலம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நான்கு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வரும் 18 ஆம் தேதி ஆத்தூர் கூலமேடு ,20 ஆம் தேதி கெங்கவல்லி,21ஆம் தேதி நாகியம்ப்பட்டி மற்றும்27ம் தேதி தம்மம்பட்டி ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது என்றார்.மேலும் நீதிமன்ற விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் காயம் ஏற்படாதவாறு முன்னேற்பாடு செய்யவும், காளைகளுக்கு போதைப் பொருட்கள் பயன்படுத்த கூடாது என்பது பற்றியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் விதிமுறைகளை மீறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடு உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
Des: Four places in Jallikattu.